கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம்!

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத பாடல் உருவாக்கத்தை சுவாரஸ்யமாக இந்த வீடியோவில் காணலாம்.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம், விரைவில் ஆடியோ ரிலீஸ், தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது. இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.