கவின் – அபர்ணா தாஸ் நடிப்பினில் உருவாகிவரும் படம் ‘டாடா’. இப்படத்தினை ‘Olympia Movies’ சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பினை முடித்து இருக்கிறார், அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு.
‘டாடா’ படம் குறித்து இயக்குநர் கணேஷ் K பாபு கூறியதாவது…
‘டாடா’ இந்த சொல் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது என்பதால், இந்த தலைப்பை வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள், அல்லது கேட்டிருப்பார்கள். தவிர, படத்தில் இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இந்த தலைப்பு இருக்கும்.
படக் குழுவினர் படத்தை மிகச்சிறப்பாக வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் ஷெட்யூல் முடிந்துள்ளது. இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது, முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை வேடங்களில் நடிக்கும் நிலையில், K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ராசுக்குட்டி’படம் வெளியானதிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தில் திரையில் ஒன்றாகத் தோன்றுகிறார்கள். மேலும் ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.