கார்த்தி, கிளாப் அடித்து துவக்கிவைத்த கென் கருணாஸின் புதியபடம்!

‘அசுரன்’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கென் கருணாஸ், நாயகனாக நடிப்பதுடன், அவரே இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தை ‘பார்வதா என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் ‘ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்களின் சார்பில், கருப்பையா சி. ராம் – காளி ராஜ்குமார் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கென் கருணாஸ் நடித்து, தயாரிக்கும் இத்திரைப்படத்தின் துவக்கவிழா, சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, விஷால் , இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, டாக்டர் ஐசரி கே. கணேஷ், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில், கென் கருணாஸூடன் அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்கிறார். தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுசின் பிரத்யேக உடை அலங்கார நிபுணரான காவ்யா ஸ்ரீராம் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக தயாராகவுள்ளது.

இன்று, இப்படத்தினை நடிகர் கார்த்தி கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.