‘கெழப்பய’ திரைப்படத்தை, யாழ் குணசேகரன், கதை எழுதி இயக்கியிருப்பதுடன், சீசன் சினிமா சார்பில் தயாரித்துள்ளார். இதில் கதிரேசகுமார், விஜய் ரணதீரன், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்த்ராஜ், கே.என்.ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் முதியவர், கதிரேசகுமார். வீட்டுக்கு திரும்பி செல்லும் வழியில் அவர், கிராமத்தின் குறுகியப் பாதையில், தனது சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது நிறைமாத கர்ப்பினியுடன், சிலர் அவருக்கு பின்னால் ஒரு காரில் வருகிறார்கள். அந்தப்பாதௌ குறுகலாக இருப்பதால் வழிவிடும்படி கார் டிரைவர் ஹாரன் அடிக்கிறார். அதை சிறிதும் பொருட்ப் படுத்தாத முதியவர் கதிரேசகுமார், வேண்டுமென்றே வழிவிடாமல் செல்கிறார்.
காரில் வருபவர்கள் வழிவிடச்சொல்லி, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால், அவரை தாக்குகின்றனர். முதியவர் கதிரேசகுமாரைத் தாக்கும் போது அந்த கிராமத்திலிருக்கும் விஏஒ உறியடி ஆனந்த்ராஜ், அதை தடுத்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் முதியவர், காரின் டயர் காற்றை பிடிங்கிவிட்டு, தன்னுடைய சைக்கிளுடன் காருக்கு வழிவிடாமல் அதன் முன்னே அமர்ந்து கொள்கிறார். காரில் வருபவர்களுக்கும், அவருக்கும் என்ன பிரச்சனை? என்பதே, ‘கெழப்பய’ படத்தின் கதை.
கெழப்பய கிருஷ்ணகுமாராக நடித்திருக்கும் கதிரேசகுமார், முடிந்தவரை முயற்சி எடுத்து நடித்துள்ளார். கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளார். படம் முழுவதும் ஒரு சில வசனங்களை மட்டுமே பேசி, முக பாவனைகள் மூலம் காட்சிகளை உணர்த்த முயற்சி செய்கிறார். அவருடைய வயதில் அவர் எடுத்திருக்கும் முயற்சியினை, பாராட்டியே ஆக வேண்டும்.
விஏஓ வாக நடித்திருக்கும் ‘உறியடி’ ஆனந்த்ராஜ், விஜய் ரணதீரன், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ஆனந்த்ராஜ், கே.என்.ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்களும் இயக்குநரின் தேவைகேற்ப நடித்திருக்கிறார்கள். காரில் வருபவர்களில் ஒருவராக நடித்திருப்பவர் தனது கண்களை உருட்டியபடி முதியவரை மிரட்டுவது, சிரிப்பினை வரவழைத்து விடுகிறது.
இடைவேளை வரை எதற்காக காரினை தடுக்குகிறார், என்பது தெரியாததால் ஒருவிதமான அயற்சி ஏற்படுகிறது. பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற, அவர் செய்த, வாங்கிய அடிகள் கதிரேசகுமார் மீது பரிதாபம் ஏற்படச் செய்கிறது. இதற்கு பின்னர் பரவாயில்லை!
கெபி இசையமைத்திருக்கிறார். அஜித்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டர், ராஜேஷ்.
சின்ன பட்ஜெட்டில், சினிமா மீது தீராக்கதல் கொண்டவர்கள் ஒன்றுகூடி எடுத்துள்ளனர்.
மொத்தத்தில், ‘கெழப்பய’ சிறுவர்கள் கட்டி விளையாடிய மணல் வீடு. அழகாத்தான் இருக்கு!