‘ரோமியோ பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘கிஸ்’ திரைப்படம், வரும் நவம்பர் 7 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இப்படம், காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கலவையாக உருவாகியிருக்கிறது.
‘கிஸ்’ திரைப்படம், ‘காதல் விதியை மாற்றுமா?’ என்ற கேள்விக்கான சுவாரஸ்யமான பதிலைச் சொல்லும் ஒரு கமர்ஷியல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் ஆகும்.
‘கிஸ்’ திரைப்படம் குறித்து இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் கூறியதாவது:
‘கிஸ்’, காதலின் மென்மையான உணர்வுகளைச் சொல்லும் அதே நேரத்தில், அதை சிந்திக்க வைக்கும் ஒரு கோணத்திலும் அணுகுகிறது. இது உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தாலும், சில ஆச்சரியமான ஃபேண்டஸி அம்சங்களும் நிறைந்தது. புதிய குரல்களையும் கதைகளையும் ஊக்குவித்து வரும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியாகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”
நடிகர் கவின் கூறியதாவது:
‘அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு சாதாரண ரொமாண்டிக் பாத்திரம் அல்ல. அதில் பல சவால்களும் உணர்ச்சிகளும் நிறைந்துள்ளன. காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதுவரை பல இதயத்தைத் தொடும் தமிழ்ப் படைப்புகளை வெளியிட்ட ZEE5-ல் இப்போது ‘கிஸ்’ படமும் வெளியாகிறது என்பதில் மகிழ்ச்சி.’ என்றார்.