‘கிஸ்’ –  விமர்சனம்!

நாயகன் கவின், காதலர்களுக்கு பூர்வ ஜென்மத்தில் செய்த கொடுமைகளின் விளைவாக, இந்த ஜென்மத்தில் காதலே பிடிக்காத கவினுக்கு, முத்தமிட்டுக்கொள்ளும் ஜோடிகளின் எதிர்கால வாழ்க்கையை அறிந்து கொள்ளும் சக்தி கிடைக்கிறது.  பலரது காதலுக்கு வில்லனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நாயகி ப்ரீத்தி அஸ்ரானியின் மீது காதல் பிறக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக ப்ரீத்தி அஸ்ரானி, கவினுக்கு முத்தம் கொடுத்துவிடுகிறார். அதன் பிறகு கவின், ப்ரீத்தி அஸ்ரானியை விட்டு விலகுகிறார். ஏன், எதற்கு? என்ன நடந்தது? என்பது தான், ‘கிஸ்’ படத்தின் ஜாலியான, ரொமான்டஸி திரைப்படம்.

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன், ‘கிஸ்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே, இளைஞர்களை கவரும் விதத்தில், கலகலப்பான   திரைக்கதை அமைத்து, அதில் வெற்றியை பெற்றிருக்கிறார். திரைக்கதையை ஜாலியாக நகர்த்திச்செல்வதில் விடிவி கணேஷ் பெரும்பங்கு வகித்துள்ளார். முதல் பாதி கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் சென்றாலும் அதன் பிறகு ஜாலியாக செல்கிறது.

கவின் இதற்கு முன்னர் வெளியான படங்களில் நடித்தை விட, இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ப்ரீத்தி அஸ்ரானி, இளமை வனப்புடன் வலம் வந்து, இளைஞர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.

கவினின் நண்பராக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், பிரபு, கெளசல்யா ஆகியோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு, கலர்புல்லாக இருக்கிறது.

ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்றபடி இருக்கிறது.

‘கிஸ்’ – இளமை துள்ளும் ரொமான்டஸி!