கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ‘மாஸ் எண்ட்ரி’ கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’, ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள், ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று அவரது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதில் ராகவா லாரன்ஸ் அவரது தம்பி எல்வின் நடிக்க, அந்தப்படத்தினை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகனாக எல்வின் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி என  மனதைத் தொடும் எமோஷன் நிறைந்தாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

கே எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் முதல் முறையாக இணைகின்றனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.