அய்யா வைகுண்டர் பற்றிய ‘ஒரு குடைக்குள்’விரைவில் வெளியாகுகிறது.

பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் காவியம் தான் ‘ஒரு குடைக்குள்’.

கலி என்னும் மாயையிலிருந்து, மக்களை தர்மயுக வாழ்விற்கு அழைத்துச் செல்ல வந்த கடவுளின் கதை.

வைகுண்டராக ஆனந்த் நடிக்கிறார். பக்தையாக மேக்னாராஜ் நடிக்கிறார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவர்களுடன் நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அய்யா சிவ சிவ சினி கிரியேஷன்ஸ் வழங்க,‘ஒரு குடைக்குள்’படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் K.L.உதயகுமார். வசனம் S.R.நிலா, ஒளிப்பதிவு V.இராஜேந்திரன்.

ஒரு குடைக்குள் படத்திற்கு இசையமைத்துள்ளார் தேனிசை தென்றல் தேவா. இத் திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் தேவா வைகுண்டநாதருக்கு தனது காந்தக் குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார், என்பது குறிப்பிடதக்கது.

அய்யா வைகுண்டர் பற்றிய ‘ஒரு குடைக்குள்’ என்ற பக்தி காவியம் வெகுவிரைவில் திரைக்கு வருகிறது!