நகைச்சுவை கலந்த காதல், அம்மா சென்டிமென்ட்! ‘குய்கோ’ 24 ஆம் தேதி ரிலீஸ்!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும், நடிகர் விதார்த் நடிப்பினில் வெளிவரும் அடுத்த படம் குய்கோ. இந்தப்படத்தில் இவருடன் யோகிபாபு, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குய்கோ படத்தினை, விஜய்சேதுபதி நடிப்பினில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியரும், பத்திரிகையாளருமான அருள் செழியன், எழுதி இயக்கியிருக்கிறார். .எஸ்.டி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அண்மையில் தணிக்கை செய்யப்பட்ட ’குய்கோ’ திரைப்படத்திற்கு, தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது!

நகைச்சுவை கலந்த காதல், அம்மா சென்டிமென்ட் இவற்றை முன்னிறுத்தி, குய்கோ உருவாக்கபட்டுள்ளது.