குழலி – விமர்சனம்!

முக்குழி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.பி.வேலு, எஸ்.ஜெயராமன், எம்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் குழலி.

‘காக்கா முட்டை’ விக்னேஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்க ஆரா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மஹா, ஷாலினி, செந்தி குமாரி, அலெக்ஸ் மற்றும் பல கிராமத்து மனிதர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், சேரா.கலையரசன்.

திண்டுக்கல் மலையடிவாரத்தை ஒட்டியிருக்கும் ஒரு கிராமம். இங்குள்ள எல்லா மக்களும் ஒன்றாக வசித்து வந்தாலும், ஜாதி இவர்களை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்துள்ளது. ஆதிக்க சாதியினை சேர்ந்த நாயகி ஆரா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நாயகன் விக்னேஷ், இருவரும் அங்குள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒருவருக்கொருவர் ஈர்ப்புடன் பழகிவர, இவர்கள் இருவருக்கும் டாக்டராகி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றனர்.

நாளடைவில் விக்னேஷ், ஆரா இருவருக்கும் காதல் முளைக்கிறது. காதலை சொல்லிக் கொள்ளாமலேயே ஆடிப்பாடி வருகின்றனர். ஒரு நாள் மொத்த ஊருக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. ஊர் மக்கள் இரு தரப்பாக பிரிந்து நின்று சண்டையிடுகின்றனர். இருவரும் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு ஓடிப் போக முடிவெடுக்கின்றனர். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் குழலி படத்தின் கதை..

இயக்குனர் காதல் , ஜாதியை முன்னிலைப்படுத்துவதா? இல்லை. படிப்பு ஜாதியை முன்னிலைப் படுத்துவதா என்பதில் தெளிவில்லாத…. திரைக்கதை அமைத்து இருக்கிறார். இதனால் படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

காக்கா முட்டை விக்னேஷ் கதாபத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் இவரின் திறமை வெளிப்படும்.. நாயகி ஆரா, இவரும் சிறப்பாகவே நடித்துள்ளார்.. திரைக்கதை அமைப்பதில் தடுமாறியிருந்தாலும், கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்து இருக்கிறார், இயக்குனர்..

குழலி படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட லெக்கேஷன்கள், அழகு மிளிர்ந்து இருக்கிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சமீரின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். தான். அதேபோல் பின்னணி இசையும் குறை சொல்ல முடியாது. இசையமைப்பாளர் உதயகுமார், பாடல்களையும் நன்றாகவே கொடுத்து இருக்கிறார்.

சாதி, காதலுக்கு எதிரியா? படிப்பிற்கு எதிரியா? குழப்பத்தில் இயக்குனர், சேரா.கலையரசன்.!

குழலி – முழுமையற்ற படைப்பு!