வெற்றிமாறன் பாராட்டிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! –

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது  Post-Production பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் காட்சிகளை பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, கவிதா பாரதி மற்றும் சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும் பொழுது,

‘’‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

தயாரிப்பாளர் K.V. சபரீஷ் கூறும் பொழுது,

‘’இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு  பணிபுரிந்து  நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். Post production  பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.