ஹரிஷ் கல்யாண்ரூ.1 லட்சம் நிதியுதவி!

பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலமாகவும், “பியார் பிரேமம் காதல்” படத்தின் மூலமாகவும் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர். நேற்று புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு ஹரிஷ் கல்யாண் நேரில் சென்றார்.

சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அவரது மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டுமென” ஹரிஷ் கல்யாண் கூறினார்.

Comments are closed.