முதல் 3 நாளில் 18 கோடி வசூல் செய்த ‘அசுரன்’

Asuran box office collection

‘கலைப்புலி’ தாணு  ‘V. Creation’  சார்பில் தயாரித்துள்ள படம் அசுரன். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான இப்படம் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சூர்யாவின் ‘காப்பான்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ நம்ம வீட்டுப் பிள்ளை’, மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தன.

இந்நிலையில் வெற்றிமாறன் –  தனுஷ் காம்போவில் வெளியான ‘அசுரன்’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்தன.

‘அசுரன்’ வெளியான முதல் ஷோவிலிருந்தே படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் மக்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் வெளியானது.

சுமார் 18 கோடி ரூபாய்  வசூல் செய்து கடந்த மூன்று நாட்களில் ‘அசுரன்’ படத்தின் வசூல் அட்டகாசமாக இருந்து வருகிறது  என்கின்றனர் படத்தை திரையிட்ட தியேட்டர்  உரிமையாளர்கள்.  அதேபோல் இனிவரும் நாட்களிலும் அந்த வசூல் தொடருமாம்.

அதிக அளவு தியேட்டர்களில் படம் வெளியாகி வசூலிக்கும் தொகைக்கு இனையாக குறைந்த அளவிலான தியேட்டர்கள் மூலம் வசூலானது ஒரு சாதனை தான் என்கின்றனர் திரையிட்ட விநியோகஸ்தர்கள்.

MG ( Minimum Guarantee ) அடிப்படையில் திரையிட்ட இடங்களில் வசூலை வாரிகுவித்து வருகிறது. அசுரன்.