நடிகர்  பாபி சிம்ஹாவின் புதிய திரைப்படம்,  ‘ராவண கல்யாணம்’

நடிகர்  பாபி சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராவண கல்யாணம்’ என பெயரிடப்பட்டுள்ளது, அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தின்  தொடக்க விழா ஹைதராபாத்தில் இன்று  நடைபெற்றது.

நடிகர்  பாபி சிம்ஹா வுடன்  தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் நடிக்கவிருக்கிறார். கதாநாயகர்களாக இவர்கள் இருவரும் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ‘ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட்’ ஆக உருவாகும் இப்படத்தை  முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண் குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை  பாபி சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.