‘பாரீஸ் பாரீஸ்’ படத்தின் ஆபாச காட்சிகளுக்கு ‘ஆப்பு’ வைத்த சென்சார்!

கங்கனா ரனாவத் நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இத்திரைப்படத்தை, ‘மீடியண்ட் பிலிம்’ சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

 

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில்  ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

 

கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு நடிகை எல்லி அவ்ரம் காஜல் அகர்வாலின் மார்பினை அமுக்கி விடும் காட்சி உட்பட பல ஆடியோ, வீடியோ காட்சிகளை வெட்டுவதற்கு பரிந்துரைத்துள்ளது. இதனால் ஆடிப்போன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு மறுபரிசீலனை செய்வதற்கு ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளனர்.

Comments are closed.