நயன்தாராவின் 75 வது படம்! – பூஜையுடன் தொடங்கியது.

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும்,  நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படம் நடிகை நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. இந்தப்படம் குறித்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா கூறியதாவது…

‘நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக்  கதையில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது . இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை  காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன்  உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.  என்றார்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.