சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது!

மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சமீபத்தில் சுமார் 500 உள்ளூர் நடனக் கலைஞர்கள் இடம்பெற்ற முதல் சிங்கிளான- ‘சீன் ஆ சீன் ஆ’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று, தங்கள் படத்தின் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கும் ஒரு பெரிய ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் படக்குழு உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் நடிக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். மேலும், நடிகர்கள் யோகி பாபு மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுமட்டுமல்லாது, படத்தில் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.

‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி, இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.