எதிர்பார்ப்பினை உருவாக்கிய ‘ மாயோன்’ OTT – ரிலீஸ்! வசூலை குவிக்க போவது யார்?

டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி  தயாரித்துள்ள படம் மாயோன். சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்த  நடிப்பினில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்.

தற்போது அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆன்மீகம் மற்றும் அறிவியல் என இரண்டையும்,  ஒரு சேர இணைத்து பேசிய இந்த படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்’  சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதினை வென்றிருக்கிறது.

மாயோன் படத்தின் OTT உரிமையை எந்த ஒரு நிறுவனமும் கைப்பற்றாத நிலையில் மாயோன் OTT உரிமையை வாங்கும் நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாயோன் OTT-ரிலீஸ் உரிமையை கைப்பற்ற போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.