‘ரவுடிகள்’ ஸ்டைலில் கேக் வெட்டிய விஜய்சேதுபதி கைதாவாரா? தீயாக பரவும் படம்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம், தென்மேற்கு பருவகாற்று. இப்படத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதி மக்களிடத்தில் தனி கவனம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக வெளிவந்த அனைத்து படங்களிலுமே தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலம் புகழ்பெற்று வருகிறார்.

விஜய்சேதுபதி ரஜினியுடன் நடித்தபோதும், தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்தபோதும், வேறு எந்த நடிகருடன் நடித்தாலும் தன்னுடைய இருப்பை அழுத்தமாக பதிவுசெய்து மக்களிடத்தில் பாராட்டு பெறுபவர்.

விஜய்சேதுபதி, தற்போது ‘பொன்ராம்’ இயக்கத்தில் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தில் மும்பையில் நடைபெற்றுவரும் படபிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் நடுவே தன்னுடைய 43 வது பிறந்த நாளை பட்டா கத்தியில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். இது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சென்னையில் ரவுடிகள் மட்டுமே தங்களுடைய சகாக்களுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். போலீஸாரின் கடும் கவனிப்பால் இந்த கலாச்சாரம் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பட்டா கத்தியால கேக் வெட்டியது சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து கண்டனங்கள் வந்த நிலையில் விஜய்சேதுபதி, தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதாவது தான் நடிக்கும் படத்தில் பட்டா கத்தி முக்கிய பங்கு வகிப்பதால், அதை பயண் படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்களில்  இனி கவனமாக இருப்பேன். என்றும் அவர் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Comments are closed.