C.மணிகண்டன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘லெக் பீஸ்’ திரைப்படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார், எஸ்.ஏ.பத்மநாபன். இயக்கியிருக்கிறார், ஶ்ரீநாத்.
இப்படத்தில், கருணாகரன், மணிகண்டன், ஸ்ரீநாத் மற்றும் ரமேஷ் திலக். வெவ்வேறு பின்பிலங்களை கொண்ட இவர்கள் நான்கு பேரும் கீழே கிடக்கும் 2000 ரூபாய் நோட்டினால், நண்பர்களாகின்றனர். இந்த 2000 ரூபாயை வைத்து ஒயின் ஷாப்புக்கு சென்று ஜாலி செய்ய விரும்புகின்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக ஒரு இக்கட்டான, உயிர் பிழைத்தால் போது என்ற சூழ்நிலையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்தார்களா, இல்லையா? என்பது தான், ‘லெக் பீஸ்’ படத்தின் லாஜிக்கில்லாத காமெடிக் கதை.
கருணாகரன், மணிகண்டன், ஸ்ரீநாத், ரமேஷ் திலக் ஆகியோரின் கதாபாத்திர அறிமுகம். அதன் பிறகு வரும் காட்சிகள் என, முதல் பாதியில் சற்று தடுமாற்றம் இருந்தாலும், அது பின்னர் சரியாகி, யோகிபாபு மூலமாக காமெடி கலாட்டாக்கள் ஆரம்பம் ஆகிவிடுகிறது.
கருணாகரன், மணிகண்டன், ஸ்ரீநாத், ரமேஷ் திலக் ஆகியோர் படம் முழுவதும் சிரிக்க வைக்கின்றனர். யோகிபாவின் மனைவியாக நடித்திருப்பவருடன், ’குயில்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் காட்சிகள் அடல்ட் வகை காமெடிகள். ‘குயில்’ பெயருக்கான காரணம், அடேய்! வகையானது.
கிளி ஜோசியராக நடித்திருக்கும் கருணாகரன், கிடைத்த காட்சிகளை சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார். வழக்கமான நடிப்பின் மூலம் மனம் கவருகிறார்.
மிமிக்ரி கலைஞராக ரமேஷ் திலக், வறுமையிலும், நேர்மை தவறாத மனிதனாக நடித்து ரசிகர்களின் மனம் கவருகிறார்.
‘லெக் பீஸ்’ படத்தை இயக்கியிருக்கும் ஶ்ரீநாத்துக்கு காமெடியுடன் எமோஷலான காட்சிகளும் இருக்கிறது. தங்கையிடம் பாசம் காட்டுவதிலும், வில்லன்களிடம் மோதுவதிலும் தன் இருப்பினை பதிவு செய்கிறார்.
மதுசூதன் ராவ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட வில்லன் கோஷ்டி சிரிக்கவும், மிரட்டவும் செய்திருக்கிறார்கள்.
யோகி பாபு, தனது வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைக்கிறார்.
விடிவி கணேஷ், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து என அனைவரும் தங்களது பங்கினை கொடுத்து, திரைக் கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் மாசாணியின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசையும், படத்தின் பலம்.
படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ், பாராட்டுக்குரியவர்.
இயக்குநர் ஸ்ரீநாத், ஏகப்பட்ட நடிகர்களைக் கொண்ட க்ரைம் கதையை, நகைச்சுவையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்தியிருக்கிறார். இளைஞர்களுக்கான குத்து பாடல்கள் ஜோர்! அனிரூத், ஒரு குத்து பாடலை பாடி, ஆட்டம் போட வைக்கிறார்.
மொத்தத்தில், ‘லெக் பீஸ்’ ருசிக்கக்கூடியது தான்!