பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,
நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.
அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன். அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம்.
இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.
அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.
ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம்
பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று.

அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம்
கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.
அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு
முக்கியமான பங்கு இருக்கிறது.இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.
அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கேதெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள். இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியாக இருக்கும். என்றார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது