’மால்’ திரைப்பட விமர்சனம்!

அறிமுக இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கத்தில், சிவராஜ்.ஆர், கார்த்திக் எம்.பி ஆகியோரது தயாரிப்பில் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும்  திரைப்படம் ‘மால்’.

தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற மற்றொரு கடத்தல் கும்பல் திட்டம் போடுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் திட்டம் போடுகிறார்கள். தன்னுடன் பணியாற்றும் ஜெய்யிடம் காதலை சொல்ல விஜே பப்பு முயற்சிக்கிறார். இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து, சிக்கலை எதிர் கொள்கிறார்கள். அதிலிருந்து மீள்வதே மால் படத்தின் கதை!

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் கெளரி நந்தா இவர்களைத்தவிர படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதியவர்களே. ஆனால் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர்.

சில்லறைத் திருடர்களாக நடித்திருக்கும் அஸ்ரப் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கூட்டணி சிரிக்க வைக்கிறது.

கஜராஜின் நடிப்பு படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

புதுமுக நடிகர் சாய் கார்த்திக் கவனம் ஈர்க்கிறார். அவரின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை கெளரி நந்தாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லை

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு இரண்டையும் கையாண்டிருக்கும்  சிவராஜ்.ஆர், பணியில் குறையில்லை.

பத்மயன் சிவானந்தத்தின் இசை ஓகே!

ஒரு காதல் ஜோடி, இரண்டு திருடர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், கடத்தல்காரர் மற்றும் அவரது எதிரிகள் ஆகிய கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காதல், ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் இவைகளை கொண்டு, சிறிய பட்ஜெட்டில் ஒரு இயக்குநர் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார்.

மொத்தத்தில் பெரிதாக குறை சொல்ல முடியாத படம் மால்!

https://www.aha.video/