‘மாரி’ படத்திற்கு பிறகு தனுஷ், பாலாஜி மோகன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘மாரி 2’. தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரித்துள்ளது. வட சென்னயிலுள்ள 2 தாதாக்களிடையே நடக்கும் கேங்க் வார் தான் இந்தப் படத்தோட கதை.
தாதா தனுஷ் ஹார்பரில் இறங்கும் சரக்குகளை சட்டவிரோதமாக பல இடங்களுக்கு சப்ளை செய்யும் ஏஜன்ட். இவருக்கு ரைட், லெஃப்ட்டாக ரோபோ ஷங்கர் மற்றும் வினோத். இந்த மூவரும் ஒன்றாகவே சுற்றி வருபவர்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டிவரும் சாய் பல்லவி, தனுஷை தாறுமாறாக லவ் பண்ணுகிறார்.
தனுஷூக்கு ஒரே ஃப்ரென்ட், பெஸ்ட் ஃப்ரென்ட் ‘கழுகு’ கிருஷ்ணா. திடீரென தனுஷூக்கும், ‘கழுகு’ கிருஷ்ணாவுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. ‘கழுகு’ கிருஷ்ணாவுடன் டொவினோ தாமஸும் சேர்ந்துகொண்டு தனுஷை கொல்லத் துடிக்கிறார். இவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தான் மாரி 2 படத்தின் க்ளைமாக்ஸ்.
பல படங்களில் பார்த்து சலித்துப்போன கதை தான் என்றாலும் ஒரு சில காட்சிகள் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. குறிப்பாக சாய் பல்லவி வரும் இடங்களெல்லாமே ரசிக்க முடிகிறது. சாய் பல்லவியின் குறும்பான நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பொண்ணுக்குள்ள இப்படி ஒரு அசாத்திய திறமையா என எண்ண தோனுகிறது. அதிலும் பிரபு தேவா நடனம் அமைத்த ‘ரௌடி பேபி’ பாட்டுக்கு தனுஷை மிஞ்சி விட்டாரோ என்ற அளவிற்கு ஆடியுள்ளார். இந்த பாடல் ஒன்ஸ் மோர் ரகம். நீண்ட நாட்கள் கழித்து பிரபுதேவாவின் சிறப்பான நடன அமைப்பு.
தனுஷ் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் பஞ்ச் போட்டு வசனம் பேசி ரசிகர்களை திருப்தி படுத்துகிறார். தனுஷூம் சாய் பல்லவியும் நடிக்கும் காட்சிகளில் தனுஷ் காணாமல் போகிறார் என்பது ஒத்து கொள்ள வேண்டிய உண்மை.
‘கழுகு’ கிருஷ்ணா நன்றாக நடித்திருக்கிறார் இவருக்கு இப்படி நடிக்க தெரியும் என்பது இந்த படத்தின் மூலம் உறுதியாக நம்பமுடிகிறது. வரலஷ்மி சரத்குமார் வழக்கமாக எல்லா படங்களிலும் வந்து போவதைப் போல் வந்து போகிறார்.
ரோபோ ஷங்கரின் வழக்கமான மொக்கைகளின்றி, காமெடி காட்சிகள் பரவாயில்லை. ரோபோ ஷங்கர் – வினோத் கூட்டணியின் காமெடிகளை ரசிக்க முடிகிறது. டொவினோ தாமஸ் பெரிய அளவில் கவரவில்லை. மற்ற படி படத்தில் ஒன்றுமில்லை.
மொத்தத்தில் ‘மாரி’ யை விட ‘மாரி 2’ க்ளாப்ஸ்களை அள்ளுகிறார். ஃப்ரென்ட்ஸ்களோட டைம் பாஸுக்கு போகலாம். பரவாயில்லை