நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி – கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், ‘வா வாத்தியார்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ சார்பில், ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2014-ம் ஆண்டு, தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரை திவாலானவர் என்றும், அவரது சொத்துடைமைகளை நிர்வகிக்க, சொத்தாட்சியரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம், ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், வட்டியுடன் அந்தத் தொகை, தற்போது 21 கோடியே 78 லட்சத்து ரூபாயாக உள்ளதாகவும், அந்தத் தொகையை செலுத்தும் வரை, ஞானவேல் ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமர்வில், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.