‘மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்க, கே.சி.பால சாரங்கன் இசையமைத்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளர் (சத்யராஜ்) ஜோதி ராமய்யா, நடுத்தர மக்களின் வாழ்க்கை குறித்து கதை எழுத துவங்குகிறார். முதலில், இந்த மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான சாகசங்களும் இருக்காது. என நினைத்து, அவர்களை பற்றி கதை எழுதுவதற்கு தகவல்களை சேகரிக்கிறார். அப்போது, அவர் நினைத்ததற்கு நேர்மாறான விசயங்கள் தெரிய வருகிறது. அதை, கதையாக எழுத துவங்குகிறார்.
ஜோதி ராமய்யாவின் கதை நாயகன் (காளி வெங்கெட்) கண்ணன். நாயகி (ஷெல்லி) கமலம். தம்பதிகளான இவர்களுக்கு (ரோஷினி ஹரி பிரியன்) தீபிகா, ( விஷ்வா) தினேஷ் என இரண்டு பிள்ளைகள். ஆட்டோ ஓட்டுநரான கண்ணன், தனது பிள்ளைகளை எப்படியாவது நல்ல நிலைமைக்கு கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறார். இதற்காக அவர் எதிர்கொள்ளும், பொருளாதார பிரச்சனை. மகளின் காதல் பிரச்சனை. சமூகத்தை எதிர் கொள்ளமுடியாத அவ்வப்போது ஏற்படும்சூழல் என போராடி வருகிறார். இந்த பிரச்சனைகளை கடந்து அவர் நினைத்தை அடைந்தாரா, இல்லையா? என்பது தான், மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் நெகிழ வைக்கும் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம் முதலில் சோர்வாக சென்றாலும், அடுத்தடுத்த காட்சிகள் சுவாரசிமாக செல்கிறது. ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கெட் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அவரது மனைவியாக கமலம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷெல்லியும் நடுத்தர குடும்பத்து பெண்ணாகவே பாவித்து, நடித்திருக்கிறார். இவர்களது மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரி பிரியன், இவர்களை மிஞ்சி விட்டார். என்றே சொல்ல வேண்டும்.
கட்சி விட்டு கட்சித் தாவும் அரசியல்வாதி கேரக்டரில், அரசியல் சூழலையும், அதிகார மைய்யங்களையும், தனது நடிப்பின் மூலம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார், கீதா கைலாசம்.
சத்யராஜ் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆனந்த் ஜி கே வின் ஒளிப்பதிவும், கே. சி. பால சாரங்கனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் முதல் பாதியையும், சத்யராஜின் இடையூறையும் தண்டி விட்டால், ஒரு நல்ல ஃபீல்குட் படத்தினை பார்த்த உணர்வு ஏற்படும்!
‘மெட்ராஸ் மேட்னி’ – குடும்ப நாடகம்!