ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.
‘மகாமுனி‘ படத்தில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
‘மகாமுனி‘ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே ‘மௌனகுரு’ என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.
‘மகாமுனி‘ படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
‘மகாமுனி‘ படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்.’ என்றார்.
‘மகாமுனி’ படத்தின் தொடக்கவிழா நேற்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநார் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் VJ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.,
மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் ,இயக்குநர்கள் M.ராஜேஷ், சந்தோஷ் P ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2D என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், மதன்(எஸ்கேப் ஆர்டிஸ்ட்), சக்திவேலன்.B(சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.