சிக்ஸ்பேக் சூரி.. வெறித்தனமான நடனம்.. யூடியூபில் சாதனை படைக்கும் ‘மண்டாடி’ புரோமோ!

சமீபகாலமாக சோஷியல் மீடியாவைத் திறந்தாலே ஒரே ஒரு பாடல்தான் எங்கும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment Pvt. Ltd.) தயாரிப்பில், எல்ரெட் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியிருக்கும் “மண்டாடி” படத்தின் அதிரடி விளம்பரப் பாடல்! வெறும் புரோமோ பாடலாக இல்லாமல், ரிலீஸான சில நாட்களிலேயே நாடு தழுவிய அளவில் ஒரு மரண மாஸ் அலையைக் கிளப்பியுள்ளது இப்பாடல். படத்தின் கரடுமுரடான ஆக்‌ஷன் களத்தையும், மாஸ் எனர்ஜியையும் அப்பட்டமாகக் காட்டும் இந்த வீடியோ, இப்போது ஒட்டுமொத்த இணையவாசிகளின் ஆல்-டைம் ஃபேவரிட்டாக மாறியிருக்கிறது.

இந்த பாடலின் அசுரத்தனமான வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், நடிகர் சூரிதான்! நகைச்சுவை நடிகராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆக்‌ஷன் ஹீரோவாக முத்திரை பதித்து வரும் சூரி, இப்பாடலில் செம மிரட்டலான சிக்ஸ் பேக் உடலமைப்போடு தோன்றி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். டூப் போடாமல், நிஜமாகவே கடலில் சண்டைக்காட்சிகள் மற்றும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு, தன் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார். அவரது இந்த அசாத்திய உழைப்பும், வெறித்தனம் நிறைந்த ‘ஹுக் ஸ்டெப்’ நடன அசைவுகளும் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் ஃபேன் எடிட்ஸ்களாகத் தீயாய் பரவி வருகின்றன.

நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? பாடலின் துள்ளலான நடன அசைவுகளைப் பார்த்துவிட்டு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் என அனைத்து தளங்களிலும் ஆயிரக்கணக்கான ரிக்ரியேஷன் வீடியோக்களைக் குவித்து வருகின்றனர். இதன் விளைவாக, சோஷியல் மீடியா பார்வைகள் மட்டுமே 75 மில்லியனைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமின்றி, தமிழ் யூடியூப் பதிப்பு மட்டும் 10 மில்லியன் வியூஸ்களை அள்ளி ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி, இந்தியா முழுவதும் இப்பாடல் பட்டையைக் கிளப்பி வருகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிரடியான துள்ளல் இசைக்கு, வேல்முருகன் மற்றும் வாகீசனின் கம்பீரமான குரல் சேர்ந்துகொள்ள, கேட்கும் யாரையும் தன்னிச்சையாக ஆட வைக்கிறது இப்பாடல். தற்போது தியேட்டர்களில் திரையிடப்பட்டு வரும் இந்த விளம்பரப் பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் விசில் சத்தமும் கைதட்டல்களும் பறக்கின்றன.

மீனவர்களின் வாழ்வியலும், படகுப் போட்டியும்!இயக்குனர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய மீனவர்களின் படகுப் போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு அக்மார்க் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர். மனிதனின் தளராத நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் போராட்ட குணத்தை மையமாகக் கொண்டு இப்படம் செதுக்கப்பட்டுள்ளது. படத்தின் விளம்பரப் பாடலுக்குக் கிடைத்துள்ள இந்த இமாலய வெற்றி குறித்துப் படக்குழுவினர், “ரசிகர்கள் பாடலின் அசைவுகளை மறு உருவாக்கம் செய்து கொண்டாடுவதைப் பார்க்கும்போது, ‘மண்டாடி’ ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆழமான இடத்தைப் பிடித்துவிட்டது என்பதை உணர முடிகிறது” என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பின்னணி வேலைகளில் பிஸியாக இருக்கும் ‘மண்டாடி’ டீம், தங்களுக்கு ஆதரவளித்த ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிரடி ட்ரெய்லர், பாடல்களுடன் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாகச் சீறிப் பாயத் தயாராகி வருகிறது “மண்டாடி”!