நாயகன் நாயகியாக முனீஷ்காந்த் ,விஜயலட்சுமி இருவரும் நடித்திருக்க, அவர்களுடன், ராதாரவி, காளி வெங்கட் , மாளவிகா அவினாஷ் , வேல ராமமூர்த்தி, குரேஷி, கோடங்கி வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். ஒளிப்பதிவு, சுதர்சன் சீனிவாசன். இசை, பிரணவ் முனிராஜ்,
சொந்த ஊரில் 2 ஏக்கர், விவசாய நிலத்தை வாங்கி செட்டிலாக நினைக்கிறார், முனீஷ்காந்த். இவருக்கு நேரெதிராக அவரது மனைவி சிட்டியில் பரபரப்பான, பளபளப்பான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார், விஜயலட்சுமி. செலவுகளுக்கு போதாத நிலையில் குடும்பம் நடத்தி வரும் நிலையில், யுடியூப் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வர்மானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் விஜயலட்சுமி. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில், அவர்கள் புதிதாக கடன் வாங்குகின்றனர்.
முனீஷ்காந்த், ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும் போது, அவரது அப்பாவான வேல. ராமமூர்த்திக்கு, ஒருவர் எழுதிக்கொடுத்த கடன் பத்திரம் ஒன்று கிடைக்கிறது. அந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டரந்த நபரை சந்திக்கிறார், முனீஷ்காந்த். அவரும் பத்திரத்தை வாங்கிக்கொண்டு, 1 கோடி ரூபாய்க்கான செக்கினை கொடுக்கிறார். வங்கியில் செலுத்த அந்த செக்கை எடுத்துக்கொண்டு போகும் வழியில் செக் தொலைந்து போகிறது. இந்நிலையில் செக் கொடுத்தவரும் இறந்து போக, முனீஷ்காந்த் என்ன செய்தார். என்பது தான், மிடில் கிளாஸ்.
முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவருமே கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் குடும்பத்தலைவனை அப்படியே பிரதிபலிக்கிறார். எப்போது பார்த்தாலும் கோபப்படும் மனைவியை சமாளித்தபடி, நடித்திருப்பது ரசனையாக இருக்கிறது.
விஜயலட்சுமி, யுடியூப் உள்ளிட்ட புதிது புதிதாக வியாபாரம் தொடங்கும் போதும், உறவினர்களுக்கு, போட்டி போட்டு சீர்வரிசை செய்ய, கணவனை கட்டாயப்படுத்தும் போதும், பணம் கிடைக்கும் முன்பும், பின்பும் கடன்காரர்களை சமாளிக்கும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, ராதாரவி, காளி வெங்கட் ,மாளவிகா அவினாஷ் ,வேல ராமமூர்த்தி, குரேஷி, கோடங்கி வடிவேலு ஆகியோர் குறிப்பிடத்தகுநத வகையில் நடித்துள்ளனர்.
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவும், பிரணவ் முனிராஜ்ஜின் இசையும் படத்தின் பலம்.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை சுவாரசியமாக ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார். இயக்குநர், கிஷோர் முத்துராமலிங்கம்.
மிடில் கிளாஸ் – குடும்பத்தினரோடு பார்க்கலாம்.