ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 அன்று ‘மெட்ராஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ரமேஷ் யாந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரியை மில்லியன் ஸ்டுடியோ பெருமையுடன் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
2 நிமிடங்கள் 26 நொடிகள் நீளம் கொண்ட இந்த டாக்குமெண்ட்ரியில் பழைய மெட்ராஸின் அழகியலை செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளாகவும், உலகம் முழுவதும் போற்றப்படும் பல ஆளுமைகள் மெட்ராஸில் பிறந்தவர்கள் என்ற வலுவான கூற்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ படத்தின் இயக்குநர் ரமேஷ் யாந்த்ரா, ‘குடியம் கேவ்ஸ்’, ‘தி ஃபாதர் ஆஃப் இந்தியன் ப்ரீஹிஸ்டரி’ போன்ற பாராட்டப்பட்ட பல டாக்குமெண்ட்ரிகளை இயக்கியவர். அவர், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ‘டிராக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இயக்குநர் ரமேஷ் யாந்த்ரா, ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ படம் குறித்து கூறியதாவது,
“மெட்ராஸ் வெறும் நகரம் மட்டுமல்ல! நம் அடையாளத்தையும் கனவுகளையும் இணைக்கும் இடம். காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெட்ராஸை இந்தப் படம் கொண்டாடும்” என்றார்.