‘மின்மினி’ – விமர்சனம்!

ஊட்டியிலுள்ள ஒரு உறைவிடப்பள்ளி ( Boarding School) . இந்த பள்ளியின் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கெளரவ் காளை மற்றும் பிரவீன் கிஷோர். இதில் கெளரவ் காளை, ரக்கட் ஆன பையன். சிறந்த கால்பந்தாட்ட வீரர். அவரது கனவு லட்சியம் எல்லாமே ‘இமாலய பைக் சவாரி’ மட்டுமே. செஸ் விளையாட்டில் வல்லவராக விளங்கும் பிரவீன் கிஷோர், ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் தனது ஓவியங்கள் இடம் பெற வேண்டும், என்ற கனவுடன் இருக்கிறான். இவர்கள் இருவருக்குமிடையேயான உறவில் ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது. அதை மீறி இருவருக்கும் ஒரு ஆழமான நட்பும் இருந்து வருகிறது. ஒருவொருக்கொருவர் நட்பு பாராட்டும் நிலையில், பள்ளி பேருந்து விபத்தில் சிக்குகிறது. கெளரவ் காளை, தன் உயிரை பொருட்படுத்தாது அனைவரையும் காப்பாற்றியதோடு, இக்கட்டான சூழலில் பிரவீன் கிஷோரை காப்பாற்றிவிட்டு, தன்னுயிரை பறி கொடுக்கிறான். இதன்பிறகு, மெல்லிய சோகத்துடன் பயணிக்கும் கதை, திரைக்கதையே மின்மினி.

நடிகர்களின் வெவ்வேறு பருவ வயதினை, சுமார் 8 வருடங்கள் காத்திருந்து படமாக்கியிருன்றனர். இது ஆசியாவிலேயே புதிய முயற்சி! இயக்குநர் ஹலிதா சமீமின் முயற்சிக்கு துணை நின்ற தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.

கதை புதிது, களம் புதிது.  இதுவரை சொல்லப்படாத விஷயத்தை படமாக்கியிருக்கிறார், ஹலிதா ஷ்மீம். ஆனால், அது அனைவராலும் ரசிக்கப்படும் விதத்தில் இல்லை. மேலும், திரைக்கதையில் சுவாரஷ்யம் மிஸ்ஸிங்!

பள்ளி காலக்கட்ட காட்சிகளை விட,  நீண்ட நெடிய இமாலய பயணம் சோர்வைத் தருகிறது. அதில் எந்தவிதமான சுவாரஷ்யமும் இல்லை.

பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, நடிப்பில் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுகிறார். இவர் தவிர,சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர்,பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் என மூவருமே சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

கண்கள் விரிய பார்க்கவேண்டிய இமாலய அழகினை, குறைவில்லாமல் காட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசை, இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம். பின்னணி இசை, சில காட்சிகள் நீங்கலாக ஒரே மாதிரியாக இருக்கிறது. குறிப்பா சொல்லனும்னா (Soundscapes) காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை மிஸ்ஸிங்! சவுண்ட் எஃபெக்டிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தொகுப்பாளர் ரேய்மெண்ட் டெரிக் கிரஸ்டாவின் படத்தொகுப்பு நேர்த்தி.

இயக்குநர் ஹலிதா சமீமின் வித்தியாசமான, நல்ல கருத்தினை சொன்ன முயற்சிக்கு மட்டுமே பாராட்டு! 8 வருட காத்திருப்புகளில், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், ஒரு நல்ல ஃபீல்குட் மூவியாக இருந்திருக்கும்!

‘மின்மினி’ மனதை தொலைத்தவர்களுக்கான வெளிச்சம்!