கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தாங்கள் பிரியப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, ஒட்டுமொத்த திரைத்துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். மகன்கள் யாத்ரா லிங்கா என இருவரும் இருவரும் கல்லூரிப்படிப்பை எட்டிபிடிக்கும் வயதில்,இவர்களின் பிரிவு அவர்களுக்கு மன அதிர்வை ஏற்படுத்தும் என இருவரது குடும்பத்தினரும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கிய போதும் அது பலனளிக்காமல் போய்விட ,கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தை நாடிய இருவரும் நவம்பர் 27, 2024ல் விவாகரத்தைப் பெற்றுவிட்டனர். இந்நிலையில்,நடிகர் தனுஷ் – நடிகை மிருணாள் தாகூர் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் காதலர் தினமான வரும் பிப்.14ம் தேதி நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. இந்நிலையில் திருமண விவகாரம் குறித்து இருவரும் உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post