விரைவில் முனி 4 காஞ்சனா 3 வெளியீடு!

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. கதாநாயகனாக நடிப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோர் நடிக்க , வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இதற்கு முன்பு வந்த முனி காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது. அத்துடன் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் என்கிறார் ராகவா லாரன்ஸ்.

எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் முனி 4 காஞ்சனா 3 காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து கொடுத்துள்ளாராம் ராகவா லாரன்ஸ்.