V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். யாமினி யக்ன மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை இயக்கம் RK விஜய் முருகன் .