‘நறுவீ’ –  விமர்சனம்!

ஏ. அழகு பாண்டியன் தயாரித்து, சுபராக் முபாரக்  எழுதி இயக்கியுள்ள திரைப்படம், ‘நறுவீ’. இதில் ஹரிஷ் அலக் ,வின்ஷு, வி.ஜே. பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீனா, , கேத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆனந்த் ராஜேந்திரன், இசை -அஸ்வந்த்.

பிரபலமான ஒரு நிறுவனம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் தேயிலைத் தோட்டம் ஒன்றை வாங்குகிறது. இந்தத் தோட்டம் தங்களுக்கு உகந்ததாக இருக்கிறதா? என ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக,  அந்த நிறுவனத்தில் பணிபுரியும்,  விஜே பப்பு, பாடினி குமார் உள்ளிட்ட ஒரு குழு செல்கிறது. ஒரு கிராமத்தை ஒட்டியுள்ள அந்த வனப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள், என அக்கிராம மக்கள் சொல்கிறார்கள். அதை மீறி அந்தக்குழு செல்கிறது. அப்போது அங்கே சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. கிராம மக்கள் சொன்னபடி, அந்தக்குழுவில் உள்ள ஆண்களுக்கு ஆபத்து ஏற்பட்டதா, இல்லையா? மர்ம முடிச்சுகளோடு சொல்லும் திரைக்கதைதான் ‘நறுவீ’.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

விஜே பப்பு – பாடினி குமார் ஜோடி கலகலப்புக்கும், காமெடிக்கும் உதவியிருக்கிறது. இவர்களோடு ஜீவா ரவி, பிரவீனா, கேதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் ஆகியோரும் திரைக்கதைக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.”

என்ற குறலுக்கு ஏற்ப, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சுபராக் முபாரக், மர்மம் கலந்து சுவாரஷ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாகவும், சுவாரசியமாகவும் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பெரிதாக குறைவில்லை! ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஓகே!

மற்றபடி குறிப்பிட்டுச்சொல்ல எதுவுமில்லை!