நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’, ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ சரண் பகாலா ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருக்கிறார். சரண் தேஜ் உப்பலபதி இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்றும், ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாயின. இதனால் நடிகர் நிகிலின் ரசிகர்களும் மற்றும் திரைப்பட ஆர்வலர்களும் ஏமாற்றமடைந்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், எந்தவித தாமதமின்றி… திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெளிவுப் படுத்தி இருக்கிறார்கள். மேலும் ஜூன் 29 தேதியை இழக்க விரும்பாததால்.. பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
உண்மையில் இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்யவும்… நிலுவையில் உள்ள வேலைகளை விரைந்து முடிக்கவும். தயாரிப்பாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறமையான கிராபிக்ஸ் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்ட நான்கு நிறுவனங்களை நியமித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் இந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் நாயகனான நிகில் சித்தார்த்தா ட்விட்டரில் பிரத்யேகப் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதனுடன் ”ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஸ்பை’ வெளியாகிறது” என்றும், ‘சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைக்கு அருகில் இயந்திர துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிகில் நிற்கும்’ பிரத்யேக புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நிகில் சித்தார்த்தா நடித்திருக்கும் ‘ஸ்பை’ திரைப்படம், திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.