விற்றுத் தீர்ந்தன ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிக்கெட்டுக்கள்!!!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘பிங்க்’, இப்படம் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு  வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்திற்கு ரசிகர்களிடத்தில் இருக்கும் செல்வாக்கை நன்கு புரிந்து வைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர் போனி கபூர் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபார விஷயத்தில் கடைசி வரை எந்தவிதமான பரபரப்பும் காட்டாமல் இருந்து வந்தார். இதனால படம் வியாபாரம் ஆவதில் சிக்கல் இருந்தாலும் அவர் நினைத்த விலையிலேயே படத்தை விற்றார்.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதிகாலை 4 மணி காட்சி உட்பட அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை, திருச்சி மற்றும் சேலம் ஏரியாவில் இப்படத்தை விநியோகம் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது.

https://twitter.com/ANTONYR82664015/status/1157992903400218624

தியேட்டர்களுக்கு அலங்காரம் செய்து கட் அவுட் வைத்து ரசிகர்கள் இப்போதே ஆரவாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

 

‘நேர்கொண்ட பார்வை’ படம் பெண்களை அதிகம் கவரும் விதமாக இருப்பதால் அஜித்குமாரின் ரசிகைகளுக்கு இது மிகவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.