திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர் கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் ED entertainment சார்பில் K ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர்.
நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன் நடந்து வருவது ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.
நிக்கிலின் முதல் பான் இந்திய படமாக ஸ்பை படம் உருவாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்படத்தில் நிகில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார், இந்தப் படம் 2022 ஆண்டு தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை வெளியிடும்போது ” 2022 தசரா பண்டிகையில் திரையரங்குகளை தாக்க வருகிறது ” என்று வெளியிட்டு இதனை படக்குழு உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தின் கதையை இதன் தயாரிப்பாளர் K ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார், இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை இயக்குனர் கேரி BH அவர்களே மேற்கொண்டுள்ளார், மேலும் ஐஷ்வர்யா மேனன் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது, அதற்காக படக்குழுவினர் தொழில்நுட்ப குழுவை வலுவாக அமைக்க திட்டமிட்டுள்ளனர், தற்போது இந்த படத்தில் ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா இணைந்துள்ளார், மேலும் சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் ஸ்டண்ட் டீம் கொண்டு உருவாக்குவதாக படக்குழு கூறியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கின்றார். அர்ஜுன் சுரிசெட்டி இந்தப் படத்தின் கலை இயக்குனராக பணிபுரிகிறார், மேலும் ரவி அந்தோனி புரொடக்சன் டிசைனராக பணியாற்றுகின்றார்.