தமிழ் சினிமாவில் அவ்வபோது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் படங்களில் சிறுமுதலீட்டு படங்களே அதிக கவனம் ஈர்க்கிறது. அந்த வரிசையில் அன்மையில் வெளியான ‘சந்தோஷத்தில் கலவரம் ‘ அனைவரின் பாராட்டை பெற்ற படம்.
‘சந்தோஷத்தில் கலவரம் ‘,படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளவர் நடிகர் நிரந்த். இவர் ஏற்கெனவே கன்னடத்தில் ‘லைப் பூ சூப்பர் ‘என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர்.
இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரின் நடை உடை பாவனைகள் பிடித்துப் போய் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி இவரை நடிகராக்கி விட்டார். அந்தப் படம் தான்’ லைப் பூ சூப்பர் ‘.
லைப் பூ சூப்பர் படத்தில நிரந்தின் நடிப்பைப் பார்த்த அதே திம்மா ரெட்டி ,தான் தமிழில் படம் தயாரிக்க முடிவு செய்த போது இவரையே முக்கிய நாயகன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் .
தமிழில் நாயகனாக அறிமுகமாவது பற்றி நிரந்த் கூறும்போது ,
“தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தோற்றத்தை விட திறமையை வரவேற்பவர்கள் ; ஆராதிப்பவர்கள். அந்த நம்பிக்கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.
நான் இயக்குநர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்க வாய்ப்புகள் வந்தன. இதை விட மாட்டேன். எனக்கு எந்த வகையிலாவது சினிமாவில் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
நடிப்பைப் பொறுத்தவரை சினிமாவில் நான் ஒரு கதாநாயகன் என்றோ நட்சத்திரம் என்றோ நினைக்க மாட் டேன். நான் ஒரு நடிகன். அதுவும் இயக்குநரின் நடிகன் என்றிருக்கவே விருப்பம்.” என்கிற நிரந்த்துக்குச் சொந்த ஊர் பெங்களூர்.
தென்னக மொழிகள் அனைத்துமே சகோதர மொழிகள்தான் எனவே தமிழோ, தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ கவலையில்லை. நல்லவனோ, கெட்டவனோ கவலையில்லை கதாபாத்திரம் மட்டுமே தனக்கு முக்கியம் என்கிறார்.
இரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் ‘கார்ணி ‘வெளியாகி நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. என்பது குறிப்பிடதக்கது.