‘ஆண்ட் ஹில் சினிமா’ மற்றும் ‘பாலாம்பூர் டாக்கிஸ்’ இணைந்து தயாரித்துள்ள ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், விஜய் ரங்கநாதன். இதில் நிவேதிதா சதீஷ், சி பி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா , கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, வேதராமன் சங்கரன். இசை, வைசாக் சோமநாத்.
நாயகி நிவேதிதா சதிஷ், தன்னுடைய கணவர் அதுல் உடன் தேனிலவுக்கு செல்கிறார். அங்கே தனது கல்லூரியில் படித்தவருடன் ஏற்பட்ட நட்பு, காதல் குறித்த அனைத்தையும் சொல்லிவிட்டு, புதிதான வாழ்க்கையை வாழ நினைக்கிறார். ஆனால், அவர் நினைத்ததற்கு நேர்மாறாக தனது கணவனின் நண்பனும், காதலனுமாகிய சிபி சந்திரனை சந்திக்க நேர்வதோடு, மூவரும் ஒரே வீட்டில் தங்கும் சூழைலை உருவாக்குகிறது. இந்நிலையில், கணவன், காதலனுக்கிடையே தவிக்கும் நிவேதிதா சதிஷ். பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டதால், கடும் உளைச்சலில் நிவேதிதா சதிஷ் கணவன் அதுல், காதலை புதுபிக்க விரும்பும் சிபி சந்திரன், இவர்களுக்கிடையே விளையாட்டாய் நடக்கும் ஒரு சம்பவம் ஒருவரின் மரணத்தில் முடிகிறது. அது யார், எப்படி நடந்தது? இந்த சம்பவத்தை மெதுவாக நகரும் திரைக்கதை மூலம், சுவாரசியமாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் விஜய் ரங்கநாதன்.
முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், அழுத்தமான கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டிருக்கிறார். கணவனுக்கும், காதலனுக்கு இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகளில், தனது முக பாவனைகளின் மூலம் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சிபி சந்திரன் மூலம் முதல் காதலால் ஈர்க்கப்பட்டவர் மீண்டும் தயங்கியபடியே சிபி சந்திரனிடம் நெருக்கம் காட்டும் காட்சியிலும் சிறப்பான நடிப்பு. ப்ளேபாய் கதாபாத்திரத்தில் சிபி சந்திரன், ஸ்மார்ட்டான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். நிவேதிதா சதிஷின் கணவராக நடித்திருக்கும் அதுல் சிறப்பு கவனம் பெறுகிறார். வாழ்க்கையில் பல தோல்விகளை கண்டவராக, பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு வேலையிழந்த மன அழுத்தம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். லக்ஷ்மி ப்ரியா, நாசர், கீதா கைலாசம் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, துணிவுடன் எதிர் கொள்ள வைக்கிறது.
வைசாக் சோமநாத் இசை, ஆத்மார்த்தமாக இருக்கிறது. பின்னணி இசை, காட்சிகளை ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரனின். ஒளிப்பதிவுக் குறை சொல்லும்படி இல்லை. எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், எந்த ஒரு செயலும், நாம் திட்டமிட்டபடி நடப்பதில்லை. ஒவ்வொரு செயலுமே தற்செயலானது தான். எனும் பட்டாம் பூச்சியின் விளைவுகள் மூலம் சொல்லியிருக்கிறார். மெதுவாக நகரும் காட்சிகளை தவிர்த்து, வேகமாக நகர்த்தியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.