ராம் பொதினேனி & ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ படத்தின் பாடல்! முதலிடத்தை பிடித்தது!

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஸ்கந்தா’ படத்தில் இருந்து முதல் சிங்கிளான ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ராம் பொதினேனி மற்றும் ஸ்ரீலீலாவின் பெப்பியான நடனம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான இந்த பாடல் ஒரே இரவில் இசை தளங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ராம் மற்ற ஸ்ரீலீலாவின் நடனத்தைப் பார்க்க ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாடலின் கிளிம்ப்ஸ் காட்சியில், ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் நடன அசைவுகள் பாடலுக்கான எதிர்பார்ப்பினை மேலும் கூட்டியது. இப்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடலின் லிரிக்கல் வீடியோவில் ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கோலிவுட்டின் சிம்ரன் போல ஸ்ரீலீலா நடனத்தில் அசத்தியுள்ளதாகவும் நடனத்தில் சிறந்தவரான ராம் பொதினேனி இதில் இன்னும் எனர்ஜியாக நடனம் ஆடியுள்ளார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

’ஸ்கந்தா’ படத்தைத் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீனின் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்க, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தினை ப்ளாக்பஸ்டர் அகாண்டா புகழ் போயபதி ஸ்ரீனு இயக்கி இருக்கிறார்.