“ஒசர காதல்” ஆல்பம் தீபாவளியன்று வெளியாகுகிறது.

சமீப காலமாக ஆல்பம் பாடல் என்ற தனி பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், “ஒசர காதல்” என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது.

காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் எத்தனையோ உண்டு. அதில் மிக முக்கியமான ஒன்று புகை பழக்கம். இதனால் பிரியும் ஜோடிகள், மீண்டும் சேர்ந்தனரா? என்பது பாடல் முடிவு. முக்கியமான இந்த கருத்தை பேசும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஜாலியாகவும் துள்ளல் இசையோடும், நடனத்தோடும் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாயகனாக ‘ பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிராசாந்தாக நடித்த வசந்த்,  நாயகியாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த ஆதிரை சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கிங் PICTURES’ இந்த பாடலை தயாரிக்க , இதனை இயக்கியிருக்கிறார் ஹரி பிரகாஷ். இவர் இதற்கு முன் 80க்கும் மேற்பட்ட குறும் படம் வெப்சீரிஸ் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

R2BROS  ராஜா ரவி வர்மா மற்றும் ரவி ராஜ் சக்ரவர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர்.  இவர்கள் இருவரும் 50 க்கும் மேற்பட்ட தனி பாடல்களை இசை அமைத்துள்ளனர்.

“ஒசர காதல்”  தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது.