பிரபலமான பாடலாசிரியர் பா. விஜய், தமிழில் ‘ஸ்ட்ராபெர்ரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் புதிய படத்தினை இயக்குகிறார். கலையரசன், அர்ஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அறிமுக இசையமைப்பாளர் கணேசன் என்பவர் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தினை எம்.எஸ்.மூவீஸ் சார்பில் கே.முருகன் தயாரிக்கிறார்.