‘பகல் கனவு’ திரைப்படம் நவம்பர் 7 முதல் வெளியாகிறது!

கேரளாவில் பிறந்தாலும் தமிழில் படம் எடுக்க வேண்டும். என்கிற ஆசையில், ‘பகல் கனவு’ என்கிற திரைப்படத்தினை தயாரித்திருக்கிறார், பைசல் ராஜ்(Faisal Raj). அவர் இத்திரைப்படத்தினை தயாரித்தோடு மட்டுமல்லாமல், கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, இயக்கியிருக்கிறார்.

‘பகல் கனவு’ திரைப்படத்தில் கூல் சுரேஷ், ஷகிலா, கராத்தே ராஜா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் first Look மற்றும் Teaser சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் நவம்பர் 7 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவருகிறது. ’Seven Studio’ சார்பில், கண்ணன் இத்திரைப்படத்தை வெளியிடுகிறார்.