பட்டாஸ் – விமர்சனம்
கொடி படத்திற்கு பிறகு தனுஷ், ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் மீண்டும் இணைந்திருக்கும் படம் பட்டாஸ்.
பட்டாஸ் படத்தினை, சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில், குமார் தியாகராஜன் அர்ஜூன் தியாகராஜன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.
தனுஷ் இரட்டை வேடமிட்டு நடித்திருக்க அவருடன் சினேகா, மெஹ்ரீன் பிர்சாடா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
தர்பார்’ க்கு பிறகு வெளியாகி ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பட்டாஸ் எப்படியிருக்கிறது?
திருட்டு வேலைகளில் கைதேர்ந்த பலே கில்லாடி தனுஷ், மெஹ்ரீன் பிர்சாடாவின் சர்ட்டிஃபிகேட்டுகளை திருட ஒரு கிக் பாக்ஸிங்க் கிளப்புக்குள் நுழைகிறார்.
அதே வேளையில் , சினேகா, கிக் பாக்ஸிங் கிளப் உரிமையாளரான நவீன் சந்திராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.
கொலை முயற்ச்சியில் தப்பித்த நவீன் சந்த்திரா இந்த இருவரையும் என்ன செய்தார்? என்பதை தமிழர்களின் வீரக்கலைகளில் ஒன்றான ‘அடி முறை’ கலையை, வழக்கமான அதிரடி திரைக்கதையில் படமாக்கியிருக்கிறார்.
தமிழர்களின் தொன்மையான தற்காப்பு கலைகளில் ஒன்றான ‘அடி முறை’ கலையை படமாக்கியிருக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் குமார் தியாகராஜன் அர்ஜூன் தியாகராஜன், இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் ஆகிய மூவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
‘கில்லாடி’ திருடனாகவும், ‘அடிமுறை’ கலை வீரராகவும் வித்தியாசம் காட்டி அசத்தியுள்ளார், தனுஷ். வீரத்திற்கு அப்பா தனுஷ் என்றால் கலகலப்புக்கு மகன் தனுஷ் என ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடித்திருக்கும் சினேகாவின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும். சண்டைக்காட்சிகளில் துணிச்சலுடன் நடித்துள்ளார்.
தனுஷைப் போலவே ‘அடிமுறை’ அடவுகளை அழகாக செய்திருக்கிறார். சொல்லிக்கொடுத்த பயிற்ச்சியாளருக்கு பாராட்டுக்கள்.
தனுஷூடன் கதாநாயகியாக நடித்துவிட்டு அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் துணிச்சலை பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவிற்கு அழகான அக்கா, அம்மா கிடைச்சாச்சு!
தனுஷ், மெஹ்ரீன் பிர்சாடாவுடனான காதல் காட்சிகள் பெரிதாக கவனம் கொள்ளவில்லை! சினேகாவை ஆட்டோவில் ஏற்றிவிடும் காட்சி உட்பட சிலகாட்சிகளில் எக்ஷ்பிரஷன் கொடுக்க முடியாமல் திணறுகிறார்.
வில்லன் நவீன் சந்திராவின் பங்களிப்பு பரவாயில்லை! அடிமுறை கலையின் ஆசனாக நாசர் கம்பீரம்!
முனீஷ்காந்த், ‘கலக்க போவது யாரு’ இருவரும் தனுஷூடன் சேர்ந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார்கள்.
விவேக் – மெர்வின் இசையில், ச்சில் ப்ரோ… ஜிகிடி கில்லடி இரண்டு பாடல்களுமே திரும்பக் கேட்கத் தோனும் பாடல்கள்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகள் ரம்மியமாகவும், சண்டைகாட்சிகளில் ஆக்ரோஷமாகவும் இருக்கிறது.
பாராட்டக்கூடிய மெஸேஜூடன் ஒரு கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது பட்டாஸ்