கர்ப்பமாக நடிப்பதற்கு அம்மா உதவினார் – கீர்த்தி சுரேஷ்!

அமேசான் ‘பிரைம் வீடியோ’ தளத்தின் மூலமாக வெளியாகும் படம் பென்குயின். ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருக்கிறார். வரும் 19 ஆம் தேதி பென்குயின் படம் வெளியாகிறது.

டீஸர் மற்றும் ட்ரெய்லர் மூலமாக ‘பெண்குயின்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

இமேஜை பற்றி கவலைப்படாத தேசிய விருது வென்ற தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ், ‘பெண்குயின்’ படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்து, சக நடிகைகளுக்கு சவால் விட்டுள்ளார் என்றால் அது மிகையல்ல.

‘பெண்குயின் படத்தில் நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ்  கூறியதாவது..,

‘பெண்குயின்’ படத்தின் கதையில் நான் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருந்ததால், குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.

கர்ப்பமாக இருக்கும் தாய் கதாபாத்திரம் என்றவுடன் அம்மாவிடம், கர்ப்பினி தாய்மார்கள்  எப்படி நடப்பார்கள், அமர்வார்கள், பேசுவார்கள் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அது நான் நடிப்பதற்கு மிகவும் பயண்பட்டது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரொம்பவே தெளிவாக இருந்தால் எனக்கு நடிப்பதற்கு ஈஸியாக இருந்தது,. கதையை பொருத்தவரையில் ரொம்ப  தெளிவாக இருந்தார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக். படத்தின்  ஃபர்ஸ்ட்  லுக் டெஸ்ட் பண்ணும் போதே, இயக்குநர் தான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

கொடைக்கானலில் படப்பிடிப்பு  நடந்தது. நல்ல குளிர்.  சில நாட்கள் குளிர் ஜுரம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது.

என் கண்ணிலிருந்து கண்ணீர் வருவது மாதிரி ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது அல்லவா, அதெல்லாமே என்னிடம் கதை சொல்லும் போதே வரைந்து வைத்திருந்தார். இப்படித்தான் நமது படத்தின் போஸ்டர் இருக்கும் என்று தெரிவித்தார்.

அவர் என்ன மனதில் வைத்திருக்கிறாரோ அது கொண்டுவந்துவிட வேண்டும் என நினைப்பார். அவர் ஒரு புதிய இயக்குநர் மாதிரியே எனக்கு தெரியவில்லை. 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளோம்.

பென்குயின் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு அற்புதமானவர். இயக்குநரை ரொம்ப ப்ரீயாக விட்டுள்ளார். தேவையான இடங்களில் மட்டும் சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார். ஒரு புதிய இயக்குநரை நம்பி, இவ்வளவு சுதந்திரம் கொடுப்பது பெரிய விஷயம்.

‘பெண்குயின்’ படத்தில் எந்தவொரு சமூக கருத்துமே கிடையாது. இதுவொரு பொழுதுபோக்கு திரைப்படம் தான். குழந்தையைக் காப்பாற்ற போராடுகிற ஒரு அம்மா. இது தான் கதை. ஆகையால் முழுக்கவே தாய்மையைப் போற்றுகிற படமாக இருக்கும். இந்தப் படம் பார்க்கிற அனைத்து தாய்மார்களுக்கும் கதையோடு ஒன்றிவிடுவார்கள். என்றார்.

https://www.primevideo.com/