காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நாவலூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளிலும் சாலை ஓரங்களிலும் வசித்து வந்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தற்போது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இப்பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன அவற்றைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் போலீஸ் நண்பர்கள் குழு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 22.09.2018 அன்று குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தோஷ் ஹதிமானி இ.கா.ப தொடங்கி வைத்தார். மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப தலைமை தாங்கினார்.
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குதல் மற்றும் மரக் கன்றுகளை நடுதல் மேலும் 120க்கும் மேற்பட்ட காவலர்கள், 100க்கும் மேற்பட்ட போலீஸ் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குடியிருப்புகளில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.