கூகுள் மருத்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் ‘செய் செய்யாதே’!

சினிமால சும்மா ஃபன் மட்டும் பண்ணாம, சொசைட்டிக்குத் தேவையான நல்ல மெசேஜ் சொல்ற படங்களுக்கு நம்ம ஊர்ல எப்பவுமே செம்ம ரெஸ்பான்ஸ் இருக்கும். அந்த லிஸ்ட்ல இப்போ மெடிக்கல் உலகத்தோட இன்னொரு பக்கத்தை ரொம்ப எதார்த்தமா சொல்ல வர்ற படம் தான் ‘செய் செய்யாதே’.  இந்த படத்தோட செம்ம மாஸ் அப்டேட் என்னன்னா,  பாஜாக-வோட அதிரடி அரசியல் தலைவர் எச். ராஜா  இதுல ஒரு சூப்பரான ஸ்பெஷல் கேரக்டர்ல நடிச்சிருக்காரு. எப்பவுமே மேடைகள்ல தன்னோட கணீர் சர்ச்சை பேச்சால அதிரடி கிளப்புற எச். ராஜா, இப்போ முதல் தடவையா கேமரா முன்னாடி வந்து நடிச்சிருக்கிறது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்துலயும், அரசியல் பக்கமும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கு. கதையோட ரொம்ப முக்கியமான ஒரு சீன்ல வர்ற அவரோட கேரக்டர், படத்தோட கருத்தை இன்னும் ஸ்ட்ராங்கா மாத்தியிருக்குன்னு டைரக்டர் ரொம்ப பெருமையா சொல்லிருக்காரு.

இந்த படத்தை ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பா சுப்புலட்சுமி ஜெயராம் தயாரிச்சிருக்காங்க. இவங்க அமெரிக்கால பி.எஸ்.சி நர்சிங் முடிச்சிட்டு மெடிக்கல் ஃபீல்டுல இருக்குறதால, அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை வச்சு நம்ம மக்களுக்குப் பயனுள்ள சில மெடிக்கல் டிப்ஸை கமர்ஷியல் எலிமெண்ட்ஸோட சேர்த்து ஒரு தரமான படமா குடுக்கணும்னு இந்த முயற்சியை பண்ணியிருக்காங்க. இந்த படத்தோட கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குறது யாருன்னு பார்த்தா, நம்ம நிஜ லைஃப் டாக்டரான எஸ். ராஜா தான். இந்தியா, அமெரிக்கான்னு பல வருஷம் டாக்டரா ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸை வச்சு, மக்கள் ஈஸியா புரிஞ்சுக்கிற மாதிரி இந்த படத்தை செதுக்கியிருக்காரு.

படத்தோட ஹீரோவா குரு விஜய் நடிச்சிருக்காரு. எமோஷன், பொறுப்புன்னு ஒரு அருமையான கேரக்டர்ல அவரோட நடிப்பு ரொம்ப இயல்பா வந்திருக்கு.இப்போ இருக்குற அவசர உலகத்துல உடம்பு சரியில்லைன்னா டாக்டரை பார்க்காம அசால்ட்டா இருக்குறது, ஓனா மெடிக்கல் ஷாப்ல மாத்திரை வாங்கி போடுறது, கூகுள பார்த்துட்டு நாமளே முடிவெடுக்குறது, அப்புறம் இந்த போதைப்பொருள் பழக்கம்னு ஏகப்பட்ட சவால்கள் இளைஞர்கள் மத்தியில இருக்கு. இதையெல்லாம் சும்மா அட்வைஸ் மாதிரி போர் அடிக்காம, ஒரு ஜாலியான கதையா சொல்லியிருக்காங்க.

இந்த படம் சும்மா டாக்டர்களை பத்தி மட்டும் இல்லாம, ஒரு பேஷன்ட் உயிரை காப்பாத்த டாக்டர், நர்ஸ், கிளீனர்ஸ், ஹாஸ்பிடல் டீம்னு எல்லாரோட கூட்டு உழைப்பும் எவ்வளவு முக்கியம்ன்றதை எமோஷனலா சொல்லியிருக்கு. திருநெல்வேலி, கொடைக்கானல், மதுரைன்னு இயற்கை எழில் கொஞ்சுற இடங்கள்ல ₹4 கோடி பட்ஜெட்ல செம்ம கிராண்டா இந்த படத்தை எடுத்திருக்காங்க. படத்துல ஹீரோ குரு விஜய்க்கு அப்பாவா டைரக்டர் டாக்டர் எஸ். ராஜாவே நடிச்சிருக்காரு. அம்மாவா தர்ஷினி ரெட்டியும், ஹீரோயின்களா டபிதா குணரத்தினே மற்றும் மோனிகா ப்ரீத்தி வி-யும் நடிச்சிருக்காங்க. தங்கச்சியா பாப்பா பிரதீக்ஷா நடிச்சிருக்கு.

ராம்நாடு வாசு பி கேமரா ஒர்க் பண்ண, ‘பருத்திவீரன்’ படத்துக்காக நேஷனல் அவார்டு வாங்கின ராஜா முகமது எடிட்டிங்க கவனிச்சிருக்காரு. பிஆர்ஓ சிவக்குமார் இந்த படத்தோட மீடியா மேட்டர்களை கவனிச்சுக்கிறாரு.

டைரக்டர் டாக்டர். எஸ். ராஜா பேசும்போது,

“நான் ஹாஸ்பிடல்ல பார்த்த எமோஷனல் விஷயங்களை சினிமா வழியா சொல்ல ஆசைப்பட்டேன். படத்தை பார்த்துட்டு வெளில வர்றவங்க தங்களோட ஹெல்த் பத்தியும் சமூக பொறுப்பு பத்தியும் யோசிச்சாலே அதுதான் இந்த படத்தோட சக்சஸ்” அப்படின்னு ரொம்ப எதார்த்தமா சொல்லிருக்காரு.