நடிகரான குமரி மாவட்ட அரசியல் வாதி, குமரி.Dr.டிக்சன்.

பூரண மதுவிலக்கு, இலவச மருத்துவம், இலவச கல்வி, ஊழலற்ற அரசு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து, குமரிமக்களுக்காக குரல் கொடுத்து வருபவர், ‘மகாத்மா காந்தி மக்கள் கட்சியி’ன் மாநில தலைவர் குமரி.Dr.டிக்சன். இதுவரை அரசியல் களத்தில் இயங்கி வந்த இவர் தற்போது திரைத்துறையில் நுழைந்துள்ளார்.

‘மகிழ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கபளீகரம்’ எனும் திரைப்படத்தில் முருகவேல் எனும் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக குமரி.Dr.டிக்சன் நடித்துள்ளார். அவருடன் மைம் கோபி, யோகிராம் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் டிரைவர், கிளீனர்களை கொடூரமாக கொலை செய்து லாரிகளை கடத்திய வட இந்திய கும்பல் ஒன்றினை காவல் துறை கைது செய்தது. இந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கதையமைக்கப் பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர், சென்னை, மகாராஷ்ட்ரா ஆகிய இடங்களில் நடந்துள்ளது.

‘கபளீகரம்’ வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.