பொன்னியின் செல்வன் – பாகம் 1 – வரும் செப். 30ஆம் தேதி வெளியாகிறது!

கல்கியின் பகழ் பெற்ற நாவல், ‘பொன்னியின் செல்வன்’. இந்த  நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரிலேயே திரைப்படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இந்தப்படத்தினை ‘லைகா நிறுவனம்’ மற்றும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இரண்டும் மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள பொன்னியின் செல்வன் படத்தினை இந்திய திரையுலகமே எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.