‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், மீரா விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம், பூக்கி. இதில் அஜய் தீஷன், ஆர் கே தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ‘ஆதித்யா ‘கதிர், அஸ்வின் ராம், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி,’ பிக் பாஸ்’ சத்யா எம் ஜே ஸ்ரீராம், ராதா, அஸ்வின் ராம், ஷியாரா சார்மி, பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார், கணேஷ் சந்திரா. கதை திரைக்கதை வசனம் புதிய பரிதி. எடிட்டிங் மற்றும் இசை விஜய் ஆண்டனி.
‘மார்கன்’ படத்தில் நடித்த அஜய் தீஷன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவரும் ஆர் கே தனுஷாவும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரது அன்றாட விருப்பங்கள் வெவ்வேறாக இருந்து வருகிறது. ஒரு நாள் பொது வெளியில், இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணத்தில் அறைந்து விடுகின்றனர். இந்த பிரச்சனை Gen Z தலைமுறையினரால், சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்படுகிறது. அது , இருவருக்கும் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் காதலர்கள் பிரிகின்றனர். அவர்கள் மறுபடியும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பது தான், பூக்கி படத்தின கதை.
அஜய் தீஷன், கைலாஷ் என்ற கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பிலும், பாவனையிலும் குறைகள் பெரிதாக தெரியவில்லை. உறவினர் தனது அப்பாவை திட்டும் காட்சியிலும், க்ளைமாக்ஸிலும் அழ வைத்து விடுகிறார். ஆழி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் கே தனுஷா, நடிப்பிலும் தோற்றத்திலும் கவருகிறார்.
மற்ற நடிகர், நடிகைகளில் பாண்டியராஜன், சுனில், அஸ்வின் ராம், இந்துமதி மணிகண்டன் ஆகியோர் தனிக் கவனம் பெறுகிறார்கள். முதல் பாதியில் ஒரு மாதிரியாக இரண்டாம் பாதி அதை சரி செய்கிறது. பாடல்கள் அடிக்கடி இடம்பெறுவதால் கொஞ்சம் சோர்வைத் தருகிறது. ஒளிப்பதிவும் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது. யூகிக்கக்கூடிய காட்சிகள் பலவீனம். மற்றபடி ஓகே!
பூக்கி – பெயரைப்போலவே!